தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டு மக்கள் அனைவருக்கு இலவச தடுப்பூசி - ராகுல் காந்தி கோரிக்கை! - இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Apr 26, 2021, 3:44 PM IST

வரும் மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இந்த தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான் ஆலோசனை செய்தது போதும். நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி தேவை. பாஜகவின் சிஸ்டத்தால் இந்தியா பாதிக்கப்படக்கூடாது எனப் பதிவிட்டுள்ளார்.

சீரம் இந்தியா, பாரத் பயோட்டெக் நிறுவனங்கள் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் இலவச தடுப்பூசி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதையும் படிங்க:50% தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details