தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து! - Rahul Gandhi

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமரவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
ராகுல் காந்தி

By

Published : May 2, 2021, 6:05 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று (மே 2) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 116 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றியும், 64 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.

ஆட்சி அமைத்திடத் தேவையான பெரும்பான்மையை திமுக கூட்டணி கைப்பற்றிவிட்டதால், அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

மு.க ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "வெற்றிபெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையில் அப்பாதையில் நம்பிக்கையுடன் செல்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details