பெங்களூரு:இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் செப்டம்பர் 13ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 80.
மங்களூருவில் உள்ள யெனபோயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நீண்டநாள்களாகசிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக ஆஸ்கர் பெர்னாண்டஸ் பொறுப்பு வகித்திருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்ந்தவர் இவர்.
பெங்களூருவில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இறுதி சடங்கு இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் வீட்டுக்கு இன்று(செப்.16)நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆஸ்கர் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் ராகுல் காந்தி இதைத்தொடர்ந்து பெங்களூருவில் நடைப்பெற்ற ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
ஆஸ்கர் பெர்னாண்டஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி இதையும் படிங்க: புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் திறப்பு