வரலாறு காணாத அளவில் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கம், வேலையிழப்பு ஆகிய பிரச்னைகளை முன்வைத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
"இது வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா" - பண வீக்கம்
டெல்லி: பண வீக்கம், வேலையிழப்பு ஆகிய விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கிகளை போலவே ஜிடிபி வளர்ச்சி பெரும் பாதிப்படைந்துள்ளது. வரலாறு காணாத அளவில் பண வீக்கமும் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. பொது மக்களின் மன வலிமை நொறுங்கியுள்ளது. தினந்தோறும், சமூக நீதி தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. இது வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா? என பதிவிட்டுள்ளார்.