டெல்லி :அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், உத்தரகாண்டில் காங்கிரசின் நிலைப்பாடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநில வாக்காளர்களை பொது சிவில் சட்டம் மூலம் பிரிவினைப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும், மக்களை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை எதிர்த்து போராடுவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசிக்க உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜேஷ் தர்மணி தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், உத்தரகாண்டில் உள்ள 5 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி இணைந்து பணியாற்று மாறும், தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேஷ் தர்மணி, அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.