தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘நேருவை அவரின் பணிகளால் மக்கள் அறிகிறார்கள்’ - நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி கருத்து - பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்ற பெயர் மாற்றப்பட்டது குறித்து ராகுல் காந்தி எம்பி கருத்து தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2023, 3:50 PM IST

ஹைதராபாத்:நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மாற்றப்பட்டது என்று கடந்த ஆகஸ்ட் 14 தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, காங்கிரஸ் ஊடக பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், விருதுநகர் நாடாளுமன்ற எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில், ராகுல் காந்தி எம்பி இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேருவை அவரது பணிகளால் மக்கள் அறிகிறார்கள். அவருடைய பெயரால் மட்டும் அவரை மக்கள் அறியவில்லை” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக புதிதாக பெயரிடப்பட்டுள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் துணைத் தலைவர் ஏ சூர்ய பிரகாஷ் இது தொடர்பாக 'X' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆகஸ்ட் 14, 2023 முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் (Prime Ministers Museum and Library Society) என அழைக்கப்படும்.

இது சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்தல் திறனுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என தெரிவித்து இருந்தார். மேலும், இந்த பெயர் மாற்ற முடிவானது, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (Nehru Memorial Museum and Library) சிறப்புக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 162வது சிறப்புக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை அதன் நிர்வாக கவுன்சில் அளித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரு அருங்காட்சியக கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முழுவதுமான தொலைநோக்கு தொழில்நுட்பங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நேருவின் பங்கை பற்றி விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு சவால்களை பிரதமர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை எடுத்துக் கூறும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது அனைத்து பிரதமர்களையும் அங்கீரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details