தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி சுற்றுப்பயணம் திடீர் ரத்து! - சுற்றுப் பயணம் திடீரென ரத்து

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஜெய்சால்மர் சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

rahul-gandhi-3-days-jaisalmer-visit-canceled
rahul-gandhi-3-days-jaisalmer-visit-canceled

By

Published : Nov 11, 2020, 5:22 PM IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிஆர்பிஎஃப் வீரர்களும் செய்து வந்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி தனது சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.

ராகுல், பிரியங்காவுடன் அவர்களது இரண்டு நண்பர்களும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வர் என்றும், அவர்கள் அனைவரும் சாமா சாலையில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் தங்குவர் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களது பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிக்க நேற்றே சிஆர்பிஎஃப் வீரர்கள் ராஜஸ்தான் சென்ற நிலையில், எதற்காக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது என தகவல் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசிடம் திட்டம் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details