டெல்லி:இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி நேற்று (ஏப்.27) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இருந்தபோதிலும் பல மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை. மத்திய அரசின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் நலனுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.