டெல்லியில் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் 769 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னதாக, பிப்ரவரி 4ஆம் தேதி, நான்கு மெட்ரோ நகரங்களில் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது.
பொது மக்களிடம் கொள்ளை - எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து ராகுல் காந்தி - ராகுல் காந்தி
டெல்லி: இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்படுவதாக ராகுல் காந்தி எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி
வரலாறு காணாத அளவு, பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.