கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான சித்தராமையாவுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.
முன்னாள் முதலமைச்சரும் மூத்தத் தலைவருமான சித்தராமையாவின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, கட்சியின் முன்னணி முகமாக சிவகுமார் உருவெடுத்துவருகிறார். அவருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது இடத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத சித்தராமையாவும் சிவகுமாருடன் முரண்டு பிடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்துப் பேசியுள்ளது.