தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

BJP's animated video: ஆதிபுருஷ் ராவணனாக ராகுல் காந்தியை சித்தரித்த பாஜக! - பாஜக

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆதிபுருஷ் படத்தின் ராவணன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு அனிமேஷன் வீடியோ ஒன்றினை பாஜக வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் பஜக இடையேயான அரசியல் மோதல்
காங்கிரஸ் பஜக இடையேயான அரசியல் மோதல்

By

Published : Jun 17, 2023, 8:00 PM IST

ஹைதராபாத்:காங்கிரஸ் பாஜக இடையே காலம் காலமாக அரசியல் மோதல் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது பாஜகவை மீண்டும் தென் இந்தியாவில் இருந்து மக்கள் அகற்றி விட்டார்கள் என்று காங்கிரசார்கள் கருத்து தெரிவித்தனர்.

இரு கட்சிகளும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம். தற்போது வரவிருக்கின்ற 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக தனது யுக்தியை சமூக வலைதளங்களில் வெளிகாட்ட துவங்கி உள்ளது. பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் ராவணன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு அனிமேஷன் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவில், ராகுல்காந்தி வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்காக செயல்படுவதாக காட்டப்பட்டு உள்ளது. மேலும் ராகுல்காந்தி இந்தியாவின் எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டி உள்ளது. இந்த அனிமேஷன் மீடியோவால் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோவிற்கு காங்கிரஸ் காரர்கள் எதிர்வினையாற்ற துவங்கி உள்ளனர்.

சனிக்கிழமை (ஜூன் 17) காலை பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தின் அந்த அனிமேஷன் வீடியோவை பகிர்ந்து இருந்தது. இரண்டு நிமிட அளவுள்ள அந்த அனிமேஷன் வீடியோவை ராகா... ஏக் மொஹ்ரா (ராகா ஒரு சிப்பாய்) என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவின் பின்னனியில் வெளிநாட்டு உச்சரிப்பில், “மோடி தலைமையில், இந்தியா உலகின் அடுத்த வல்லரசாக மாற உள்ளது. 2024 இல் மோடி வெளியேற வேண்டும். உலகப் பொருளாதார வல்லரசாக உள்ள் இந்தியாவைத் தடுக்க இது எங்களின் கடைசி வாய்ப்பு. இந்தியாவை உடைக்க நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவை உள்நாட்டிற்குள் பிளவுபடுத்துங்கள். இந்தியாவில் வணிக முதலீட்டை மட்டுப்படுத்த சிறுபான்மை வெறுப்புக் கதையைப் பரப்புங்கள். மோடியை எப்படி வேண்டுமானாலும் நிறுத்துங்கள்” என்று அந்த குரல் பேசுவது போல் வெளிநாட்டினர் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க முயல்வதாக வீடியோ காட்டுகிறது.

அந்த வீடியோவில் அனிமேஷன் செய்யப்பட்ட வெளிநாட்டு கதாபாத்திரம் சூட் மற்றும் டை அணிந்தபடி தனது தொலைபேசியில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் என்ற எண்ணிற்கு அழைப்பதை போலவும் அதை ராகா எடுப்பதை போலவும் காட்டுகிறது. அடுத்த காட்சியில் அனிமேஷன் செய்யப்பட்ட ராகா வெளிநாட்டவருடன் கைகுலுக்கி, "உள் கொள்கை ஆவணங்களை (Internal Policy Documents)" அவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெளிநாட்டவரிடமிருந்து ஒரு "பிரேக் இந்தியா ஸ்ட்ராடஜி" கையேட்டைப் பெறுவதை போல காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து சிறுபான்மைத் தலைவர்களைச் சந்தித்து வெளிநாட்டு ஊடக அலுவலகங்களுக்குச் செல்லும் ராகுல், "முஸ்லீம்கள் மட்டுமல்ல, தலித்துகள், சீக்கியர்கள் அனைவரும் இந்தியாவில் துன்புறுத்தப்படுகிறார்கள்" என்று கூறுகிறார். ராகா ஒரு நம்பிக்கை, இந்தியாவிற்கு அல்ல, இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு. ராகா இந்தியாவை உடைக்கப் பயன்படும் ஒரு சிப்பாயாக தன்னைக் காட்டிக் கொண்டார்" என்ற குரலுடன் வீடியோ முடிவடைகிறது.

பாஜக பகிர்ந்து உள்ள வீடியோவின் கமெண்ட் பக்கத்தில், “மோசமான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக விமர்சிக்கப்படும் ஆதிபுருஷ் படத்துடன் ஒப்பிட்டு இந்த அனிமேஷன் வீடியோ நல்ல தரத்துடன் இருப்பதாக” ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் பலர், கமெண்ட் பகுதியில் ராகுல்காந்தி வெளிநாடுகளில் மோடிக்கு எதிராக ஆவணங்களை காட்டி பேசியதை போன்ற அனிமேஷன் காட்சிகளையும் பதிலுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலகளவில் 140 கோடி வசூல், எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் ‘ஆதிபுருஷ்’ செய்த சாதனை

ABOUT THE AUTHOR

...view details