தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவ.24 இன்றைய ராசிபலன் - TODAY HOROSCOPE

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.

TODAY HOROSCOPE: நவ.24 இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: நவ.24 இன்றைய ராசிபலன்

By

Published : Nov 24, 2022, 6:24 AM IST

Updated : Nov 24, 2022, 6:36 AM IST

மேஷம்: வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச்செல்லத் தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.

ரிஷபம்: உங்களது கவனம் உங்களது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.

மிதுனம்:நெடுநாட்களாக ஏற்படுத்த விரும்பிய குடும்பத்தினரின் சந்திப்பை, வீட்டில் ஏற்பாடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதற்கு உகந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரை மட்டுமல்லாமல், நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் ஆகியோரையும் அழைத்து விருந்து அளிக்கலாம். வாழ்க்கைத் துணையும் முயற்சியைப் பாராட்டுவார்.

கடகம்: வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுகள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், வழக்கமான அமைதியான நிலைக்குத் திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.

சிம்மம்:பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். வேலை செய்யும் முறையை சிறிது மாற்றிக்கொள்வது முன்னேற்றத்தை கொடுக்கும்.

கன்னி: கூட்டாளித்துவ முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், உங்கள் பணியை மிகச்சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.

துலாம்: மக்கள் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள். அதைப்பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். நீக்குப் போக்காக அணுகுமுறையின் மூலம், கருத்துகளை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.

விருச்சிகம்:அறிவுப்பூர்வமாக சிரிக்காமல், மனப்பூர்வமாக சிந்திப்பீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்யவும் கூடாது. ஆனால், உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால், இதன் மூலம், பொது மக்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு.

தனுசு:மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

மகரம்:நாளின் தொடக்கம் சிறந்த வகையில் இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் தொடங்குவதால், இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்புள்ளது. மணவாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

கும்பம்:காதல் வயப்படக் கூடும். திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தைச் செலவிடுவார்கள். பழைய புகைப்படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மீனம்: ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்று நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் கடுமையாக தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Last Updated : Nov 24, 2022, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details