டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி பெரும் வன்முறை சம்பவமாக வெடித்தது. பேரணியாக செங்கோட்டைக்கு சென்ற போராட்டக்காரர்கள், அங்குள்ள கம்பத்தில் ஏறி கால்சா எனும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, துணை ராணுவ படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர்.
டெல்லி வன்முறை: காவல் துறைக்கு கிடைத்த 1700 வீடியோக்கள்! - விவசாயிகளின் டிராக்டர் பேரணி
டெல்லி: வன்முறை தொடர்பான 1700 வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடமிருந்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கோட்டை பகுதியில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தடவியல் குழுவினர் நேற்று (ஜன-30) ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி, வன்முறை தொடர்பான 1700 மொபைல் கிளிப்புகள் , சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடமிருந்து டெல்லி காவல் துறைக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.