ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் அட்டவணையில் போர் விமானி பாவனா காந்த் பெயர் இடம்பெற்றது.
அதன் படி, இன்று நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டு, விமானி பாவனா போர் விமானத்தை இயக்கினார். இந்திய வரலாற்றில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி இவர் தான்.