மகாராஷ்டிரா: அவுரங்காபாத் மாவட்டத்தில் ஷாபாஸ் அலி கான் (32) என்பவர் வசித்துவருகிறார். ஷபாஸ் அலி கானுக்கும் அவரது மனைவிக்கும் பால் வாங்குவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், ஷாபாஸ் அவரது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, ஷாபாஸ் அலி கான் தனது மனைவியிடம் பால் வாங்கும்படி கூறியதாகவும், பணம் தராமல் எப்படி பால் வாங்குவது என மனைவி அவரிடம் கேள்வி கேட்க, கோபமுற்ற ஷாபாஸ் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி முத்தலாக் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.