புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு, மத்திய சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு (எம்.சி.சி) மாணவர் சேர்க்கை நடத்துகிறது. இந்த கலந்தாய்வில், ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்படி, புதுச்சேரியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும், மேல்நிலை கல்வியைப் புதுச்சேரியில் படித்திருக்க வேண்டும் போன்ற தகுதி உடையவர்கள் மட்டுமே உள்ளூர் மாணவர்களாகக் கருதப்படுவார்கள்.
ஆனால், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ளூர் ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ளூர் ஒதுக்கீட்டு இடங்களுக்குப் புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த மாணவர்களை மட்டும் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு உத்தரவிட்டார்.
தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் : ஜிப்மருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கலந்தாய்வு
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு, மாநில சுகாதாரத்துறை பட்டியலில் இருக்கும் தகுதி வாய்ந்த மாணவர்களை அழைக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு குழுவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ஜிம்பர் மருத்துக் கல்லூரிக்கு உத்தரவு
இதையும் படிங்க:
சௌகார்பேட்டை கொலை சம்பவம்: புனேவுக்கு பறந்த தனிப்படை காவல் துறை!