இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமான ககன்யான் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய மைல்கல்லாக திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த என்ஜின் மேலும் நான்கு பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 2023ஆம் ஆண்டில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இந்த சாதனையை புரியும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இதையும் படிங்க:புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!