தமிழ்நாடு

tamil nadu

கத்தாரில் இருந்து வந்து ராஜஸ்தான் சிறுமியைக் கடத்த முயன்ற இளைஞர் - ஆன்லைன் விளையாட்டால் சம்பவம்!

By

Published : Jun 26, 2022, 8:10 PM IST

ஆன்லைன் விளையாட்டின் மூலம் நட்பாகி 13 வயது சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற கத்தாரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Free fire
Free fire

தெளசா: ராஜஸ்தான் மாநிலம் தெளசாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, ஃப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டு மூலம் கத்தாரைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் நட்பாகியுள்ளார்.

இதைப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர், கடந்த 18ஆம் தேதி கத்தாரில் இருந்து டெல்லி வந்துள்ளார். பின்னர் சிறுமியை சந்திப்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். அவரை சந்திக்க சிறுமி மறுக்கவே, சிறுமியை மிரட்டி ரயில் நிலையத்திற்கு வர வைத்துள்ளார்.

பின்னர், சிறுமியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவர் நேபாளம் செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிகாரில் சிறுமியுடன் அந்த இளைஞரைப் பிடித்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், "சிறுமியைக் கடத்திச்சென்ற நபர் நடாஃப் மன்சூரி. அவர் சிறுமியைச் சந்திக்க டெல்லி வந்தபோது போலியான அடையாள அட்டையைக் காட்டி சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போன் எண்ணின் இருப்பிடத்தை வைத்தே, பிகாரில் அவரைப் பிடித்தோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 3 வயது சிறுமியை 500 ரூபாய்க்கு விற்றாரா 7 வயது சிறுவன்?

ABOUT THE AUTHOR

...view details