தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புயலை எதிர்கொள்ள தயார்! - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: நிவர் புயலை எதிர்கொள்ள அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

cm
cm

By

Published : Nov 25, 2020, 12:14 PM IST

புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தனது வீட்டில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ” தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் மற்றும் பாதுகாப்பற்ற மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. உடனடி தேவைகளுக்கு மின்துறை ஊழியர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

புயலை எதிர்கொள்ள தயார்! - முதலமைச்சர் நாராயணசாமி

அதிகளவில் நீர் தேங்கினால் டீசல் இன்ஜின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மீட்பு துறையானது 24 மணி நேரம் செயல்பட உள்ளது. மீனவர்களை பாதுகாக்கும் வகையில் 80 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன “ என்று கூறினார்.

இதையும் படிங்க: நிவர் புயல் - சென்னை மழை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details