புதுச்சேரி கல்வித் துறைக்குப் போலி கடிதத்தால் சர்ச்சை - சமூக ஆர்வலர்கள் விமர்சனம்
புதுச்சேரி கல்வித் துறை வெளியிட்டதுபோல் இருந்த போலி கடிதத்தில் எழுத்துப்பிழை என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்தனர்.
![புதுச்சேரி கல்வித் துறைக்குப் போலி கடிதத்தால் சர்ச்சை pondy education report spelling mistakes common people criticize புதுச்சேரி கல்வி துறை கடிதத்தில் எழத்துப்பிழை சமூக ஆர்வலர்கள் விமர்சனம் pondy education letter](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13909785-thumbnail-3x2-pondy.jpg)
புதுச்சேரி:சுனாமி எச்சரிக்கையால்புதுச்சேரி மாநிலப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் எழுத்துபிழைகள் காணப்பட்டன. அதில், காரணம் என்ற வார்த்தை’காரனம்’ எனவும், மாண்புமிகு என்ற வார்த்தை ’மான்புமிகு’ எனவும் இருந்தது. பின்னர் புதுச்சேரி கல்வித் துறை இந்தக் கடிதத்தை வெளியிடவில்லை எனத் தெரியவந்தது. இத்தகைய போலி கடிதத்தை கண்டு கல்வித் துறையே முதலில் கல்வி கற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துவருகின்றனர்.
நேற்று (டிசம்பர் 14) இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதன் எதிரொலியாகப் புதுச்சேரி மாநிலத்தில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டுவந்ததால் புதுச்சேரி மாநிலத்திற்குச் சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டது.
இதனால் இன்று சமூக வலைதளங்களில் புதுச்சேரி மாநில கல்வித் துறையின் சார்பில் வந்த கடிதம்போல் ஒரு கடிதம் வலம்வந்தது, அதில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் செயல்பட்டுவரும் தனியார், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு இருந்தது. இது உண்மை எனப் பலர் எண்ணியிருந்தனர். இந்தச் செய்தி குறிப்பில் அதிகமாக எழுத்துப்பிழைகள் இருப்பதாகப் பலர் விமர்சித்திருந்தனர்.
இந்தக் கடிதத்தைப் பார்த்த அனைவரும் புதுச்சேரி மாநில கல்வித் துறையே இப்படி எழுத்துப் பிழைகளுடன் தட்டச்சு செய்தால், பள்ளி மாணவர்கள் நிலை எப்படி இருக்கும் எனவே கல்வித் துறையே முதலில் கல்வி கற்க வேண்டும் எனச் சில சமூக ஆர்வலர்கள் விமர்சித்துவருகின்றனர். இறுதியில் இந்தப் போலி கடிதத்தால் உருவான சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிரடி ரெய்டு