தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம் பெண் தற்கொலை வழக்கு; குற்றத்தை ஒப்புக்கொண்ட புஷ்பா பட நடிகர் சிறையில் அடைப்பு! - hyderabad news

Pushpa Fame Jagadish: இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட புஷ்பா பட நடிகர்
இளம் பெண் தற்கொலை வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 12:20 PM IST

ஹைதராபாத்:கடந்த 2021ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், புஷ்பா. இப்படத்தில் வரும் முதல் பாகத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி.

இவர் தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் பட வாய்ப்புக்காக ஹைதராபாத் வந்த ஜெகதீஷ், இளம் பெண் ஒருவரைச் சந்தித்துள்ளார். சில நாட்களில் இவர்களது நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில் புஷ்பா படத்தின் மூலம் பிரபலமாகி பட வாய்ப்புகள் அதிகரித்த நிலையில், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும், இதனை விரும்பாத அந்த இளம் பெண் வேறு இளைஞருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஜெகதீஸ், மீண்டும் அவருடன் பழக வேண்டும் என நினைத்துள்ளார். இந்நிலையில், கடந்த நவ.27-ஆம் தேதி பஞ்சகுட்டாவில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவர் வேறொருவருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த ஜெகதீஸ், அதனை தன் செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விசிக கிளைச் செயலாளர் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

இதனையடுத்து, அந்த புகைப்படங்களை அந்த பெண்ணுக்கு அனுப்பி, தான் சொல்வதை கேட்காவிட்டால் சமூக வலைத்தளங்களில் அதனை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த நிலையில், அந்த இளம் பெண் கடந்த நவ.29-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், பெண்ணின் தந்தை இது குறித்து பஞ்சகுட்டா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டிச.6-ஆம் தேதி ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கையில், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண் வேறொரு ஆணுடன் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், அதனால்தான் நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டு நாள் காவலுக்குப் பிறகு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: வள்ளியூரில் தங்க நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற திருட்டு கும்பல் அதிரடி கைது..!

ABOUT THE AUTHOR

...view details