உத்தரகாண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மாநில இளைஞர் அணி தலைவராக இருந்துள்ளார்.
மாநிலத்தின் இளம் முதலமைச்சர்
45 வயதான புஷ்கர் தாமி, கதிமா தொகுதி உறுப்பினராவார். உத்தரகாண்ட் மாநிலத்தின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். முன்னாள் ராணுவ வீரரின் மகன், சாதராண தொண்டனான தன்னை, கட்சி முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது பெருமை அளிப்பதாக புஷ்கர் தெரிவித்துள்ளார்.