சண்டிகர்:பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் டாப் 10 மொழிகள் பட்டியலில் பஞ்சாபி மொழியை சேர்த்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் மொழியாக பஞ்சாபி கருதப்படும் நிலையில் டாப் 10 மொழிகள் பட்டியலில் 5ஆவது இடம் வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பஞ்சாப் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய்மொழியான பஞ்சாபியிலேயே வாசிக்க மற்றும் உரையாட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் உள்ள பஞ்சாப் குழந்தைகளையும் இதன் மூலம் ஒன்றிணைக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு, பஞ்சாபி மொழியை டாப் 10 மொழிகள் பட்டியலுக்குள் கொண்டு வந்து அங்கீகாரம் வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியப் பள்ளிகளில் விரைவில் பஞ்சாபி மொழியில் பாடம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.