தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு - பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு

பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாபி நடிகர் தீப் சித்து உயிரிழப்பு
பஞ்சாபி நடிகர் தீப் சித்து உயிரிழப்பு

By

Published : Feb 15, 2022, 10:51 PM IST

ஹரியானா: சோனிபட் அருகே நடந்த சாலை விபத்தில் பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து (37) உயிரிழந்ததாக சோனிபட் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர்.

குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வேயில் பிப்லி டோல்கேட் அருகே நின்றுகொண்டிருந்த டிரக் மீது அவர் (தீப் சித்து) தனது காரை மோதியுள்ளார். இந்தச் சாலை விபத்தில் இறந்த நடிகர் தீப் சித்துவின் மரணம் குறித்து ஹரியானா காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இவர் மீது 2021ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் குற்றச்சாட்டு இருந்தது. நடிகர் தீப் சித்து 2015ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவருகிறார். மொத்தம் ஆறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட்: வேண்டாம்னு சொல்லியும் திமுக அதைச் செஞ்சாங்க, ஆதாரம் இருக்கு - எடப்பாடி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details