தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை: நடிகர் தீப் சிங் சித்து மீது வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து பெயர் இடம்பெற்றுள்ளது.

Punjabi actor Deep Sidhu
நடிகர் தீப் சிங் சித்து

By

Published : Jan 28, 2021, 4:24 PM IST

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறைச் சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த கம்பத்தில் ஏறி கால்சா என்னும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தை பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து பேஸ்புக் செயலியில் நேரலை செய்தார். எரியும் விளக்கில் திரியைத் தூண்டுவதுபோல நடிகர் தீப் சிங் சித்தின் செயல் வன்முறையைத் தூண்டும்வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை நேற்று (ஜன. 27) தாக்கல்செய்தனர். அதில் நடிகர் தீப் சித்து, ரவுடி லக்கா சாதனா பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, டெல்லி போராட்டத்தை முன்நின்று நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா, தர்ஷன் பால் விரைந்து பதிலளிக்க வேண்டும் என காவல் துணைஆணையர் (டிசிபி) சின்மோய் பிஸ்வால் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கான பதில் அடுத்த மூன்று நாள்களில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 19 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் நேரலை: நடிகர் தீப் சிங் சித்துவிற்கு என்ஐஏ அழைப்பாணை!

ABOUT THE AUTHOR

...view details