விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.
இயல்பு நிலைக்கு திரும்புமா பஞ்சாப்?
சண்டிகர்: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக பஞ்சாபில் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டு நிலையில், விரைவில் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதில் மொத்த ரயில் சேவையும் முடங்கியுள்ளது. இந்நிலையில், விரைவில் ரயில்வே சேவை தொடங்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். ரயில் பாதைகளில் உள்ள ஒன்பது தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 22 தடைகளை நீக்க மாநில அரசு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.