அமிர்தசரஸ்(பஞ்சாப்): பஞ்சாப், அமிர்தசரஸ் அடுத்த நாக் கலான் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குத் தீராத வயிற்று வலி காரணமாக பெண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் ராட்சத அளவிலான கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பெண் வயிற்றில் இருந்த மூன்றரை கிலோ எடையிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ’குரு கி பாக் கிராமத்தைச் சேர்ந்த குல்பிர் கவுர் என்ற பெண் தீராத வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களாக தவித்து வந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது.