சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை தரப்பில், இந்த பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதோடு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டன. இதனால் மாணவர்களின் ரத்த மாதிரிகளை குரங்கம்பை பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.
பஞ்சாப்பில் 4ஆம் வகுப்பு மாணவனுக்கு குரங்கம்மை - 4ஆம் வகுப்பு மாணவனுக்கு குரங்கம்மை
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 4ஆம் வகுப்பு மாணவனுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் ஒரு மாணவனுக்கு குரங்கம்பை உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று மாணவர்களின் பெற்றோர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளியை மூட வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க:குரங்கம்மை: கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு