சண்டிகர் (பஞ்சாப்): அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆட்சி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றுள்ளார். பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்தநிலையில், பஞ்சாப் மாநில சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி கடும் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அதில், சபாநாயகர் சந்த்வான் நேற்று சனிக்கிழமை, பதிண்டாவின் சிர்கி பஜார் பகுதியில் நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பூசாரி, பூஜையின் ஒருபகுதியாக பசுவின் வால் கொண்டு சபாநாயகர் அணிந்திருந்த தலைப்பாகையில் அடித்து ஆசீர்வாதம் செய்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சீக்கியர்களின் மன நம்பிக்கையை புண்படுத்தும்படியாக உள்ளது என பதிவிட்டு விமர்சனம் செய்தனர்.