தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது! - நாய்க்கு பாலியல் வன்கொடுமை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Punjab
Punjab

By

Published : Nov 30, 2022, 4:29 PM IST

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சிம்லாபுரி பகுதியில் நபர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் இருந்த பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர், அண்டை வீட்டினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வேளையில், அந்த வீட்டுக்குள் சென்று, அவர்களது செல்லப்பிராணியான பெண் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அந்த நபர், நாயின் கால்களை கட்டிவைத்து, இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை நாயின் உரிமையாளருடைய உறவினர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, உள்ளூர் விலங்குகள் நல அமைப்பினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் புலிகள்! மக்கள் அச்சம்..

ABOUT THE AUTHOR

...view details