டெல்லி-ஹரியானா மாநில எல்லைப் பகுதியான சிங்குவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் பகுதியில் அக்டோபர் 15ஆம் தேதி லக்பீர் சிங் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை நிஹாங் என்ற சீக்கிய பிரிவைச் சேர்ந்த சிலர்தான் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பான விசாரணை அறிக்கை தருமாறு பஞ்சாப் அரசுக்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் தந்துவருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை பஞ்சாப் மாநில அரசு நியமித்துள்ளது. ஏடிஜிபி வரிந்தர் குமார், டிஐஜி இந்தர்பீர் சிங், எஸ்எஸ்பி ஹர்விந்தர் சிங் ஆகியோர் அடங்கிய எஸ்.ஐ.டி. குழு இந்த விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் கைதாகி விடுதலையானார் பிரியங்கா காந்தி