கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்கள் தங்களுக்கென்று சானிடைசர்களைக் கொண்டுவரவும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.