தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்பு! - பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Punjab scholls reopen in Auguest 2
Punjab scholls reopen in Auguest 2

By

Published : Jul 31, 2021, 3:38 PM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் பள்ளிகளை ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. பள்ளிகள் கோவிட் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மாணாக்கர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் கட்டாயம்” எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் மகேஷ் பதில்

ABOUT THE AUTHOR

...view details