தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் குண்டுவீச்சு சம்பவம்: முதலமைச்சர் பகவந்த மான் கண்டனம்! - பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த மான்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பகவந்த மான்
பகவந்த மான்

By

Published : May 10, 2022, 12:09 PM IST

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மாநில காவல்துறைக்கு உட்பட்ட உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று(மே 9) இரவு 7.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேமடைந்துள்ளது தெரியவந்தது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தை சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த மான் கூறுகையில், "மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை பொறுத்துக் கொள்ளமுடியாது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் உட்பட இந்தியர்கள் நால்வருக்கு புலிட்சர் விருது!

ABOUT THE AUTHOR

...view details