மான்சா:பஞ்சாப் மாநிலம் மான்சாவில் உள்ள ஜச்சா பச்சா மருத்துவமனையில் இன்று (டிசம்பர் 12) பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் உயிரிழந்தனர். இந்த பிரசவத்தின்போது மருத்துவர்கள் இல்லையென்றும், வீடியோ கால் மூலம் மருத்துவமனை ஊழியர்களை வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
வீடியோ கால் மூலம் பிரசவம்.? தாயும் குழந்தையும் மரணம்.. - child die during childbirth in Punjab
பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவமனை ஊழியர்கள் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததால் தாயும் குழந்தையும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு, நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் மருத்துவமனை நிர்வாகம், உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. அதோடு பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மான்சா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. ரூ.2 லட்சம் கொடுத்து மறைக்க முயற்சித்த பஞ்சாயத்து..