சண்டிகர்:கோடை கால தொடக்கமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், மின் சேமிப்பு முயற்சியாகவும் பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, மே 2ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை, அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் காலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் தரப்பில், "அரசு அலுவலகங்களின் பணி நேரம் மாற்றம் தொடர்பாக பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களும் அரசு அலுவலகங்களுக்கு எளிதாக வந்து செல்ல முடியும். அரசு அலுவலகங்கள் காலையிலேயே செயல்பட தொடங்கும் என்பதால், சாமானியர்கள் விடுமுறை எடுக்க தேவையில்லை. அதேபோல் பிற்பகல் 2 மணிக்கு அலுவலகம் முடிந்துவிடும் என்பதால், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடுதலாக நேரம் செலவிடலாம்.