தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேங்ஸ்டர்கள் தேவை... பாம்பிஹா ரவுடி கும்பல்... சமூக வலைதளங்களில் சர்ச்சை... - davinder bambiha group in punjab

பஞ்சாப் மாநிலத்தில் பிரபல ரவுடி கும்பலான பாம்பிஹா கேங் பேஸ்புக் மூலம் கேங்ஸ்டர்கள் தேவை என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேங்ஸ்டர்கள் தேவை... பாம்பிஹா ரவுடி கும்பல்...
கேங்ஸ்டர்கள் தேவை... பாம்பிஹா ரவுடி கும்பல்...

By

Published : Sep 23, 2022, 8:14 PM IST

அமிர்தசரஸ்:ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் ரவுடி கும்பல்கள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக லாரன்ஸ் பிஷ்னோய், பாம்பிஹா, நீரஜ் பவானா கும்பல்களை சேர்ந்த ரவுடிகள் பிரபலங்களை மிரட்டி பணம் வாங்குவது, ஆள் கடத்தல், கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் பாம்பிஹா கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

பாம்பிஹா ரவுடி கும்பல் பேஸ்புக் பதிவு

இந்த நிலையில், பாம்பிஹா கும்பல் தனக்கென ஒரு பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் கேங்ஸ்டர்கள் தேவை என்று பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அந்த பதிவில், "பாம்பிஹா கும்பலில் ஆள்சேர்ப்பு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள இளைஞர்கள் கீழ் காணும் வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. முதலமைச்சர் பகவந்த் மான் ஆட்சியில் ரவுடி கும்பல்கள் அச்சமின்றி செயல்படுவதாகவும், காவல்துறை செயல்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க:லாட்டரியால் வந்தது ரூ. 25 கோடி... போனது நிம்மதி... வேதனைப்படும் ஆட்டோ ஓட்டுநர்...

ABOUT THE AUTHOR

...view details