அமிர்தசரஸ்: பஞ்சாபில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை ஒரு மாதத்திற்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்துள்ளது என்று மாநில பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.
விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை(MSP) பிரச்சனைகளில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியப் கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டிய சர்வான் சிங் பந்தேர்,"டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை டோல் பிளாசாக்கள் இலவசமாக்கப்படும். ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் அந்தக் காலகட்டத்தில் வழங்கப்படுவதையும் அமைப்பு உறுதி செய்யும்" என்றார்.