தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இருளில் தவிக்கும் மக்கள் - சித்துவின் மின்சார கட்டண பாக்கியோ ரூ. 8 லட்சத்திற்கும் மேல்! - சித்து மின்சார

மின்சார தேவை நெருக்கடியால் பஞ்சாப் மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள மின் தடையை கடுமையாக விமரிசித்துவரும் காங்கிரஸ் அதிருப்தி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, 9 மாதமாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரூ. 8 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டண தொகை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது.

சித்து
சித்து

By

Published : Jul 3, 2021, 4:22 AM IST

சண்டிகர்: மின்சார தேவை நெருக்கடியால் பஞ்சாப் மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள மின் தடையை காங்கிரஸ் அதிருப்தி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக விமரிசித்து வருகிறார்.

ஆனால், இவரே 9 மாதமாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் 8 லட்சத்து 68ஆயிரத்து 499 ரூபாய் மின் கட்டண தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடுமையான மின்வெட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது. தீவிர வெப்பக்காற்று காரணமாக எதிர்பாராத வகையில் மின்சார உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் மின் தேவை பெருமளவு அதிகரித்திருக்கிறது. தற்போது 14,500 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் தேவைப்படும் நிலையில், இதில் 1,330 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 மணி நேரத்திற்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

குறிப்பாக கபுர்தலா, தர்ன் தாரன், பெரோஸ்பூர், முக்த்சார், லூதியானா ஆகிய பகுதிகளில் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது. பாட்டியாலா, பதிண்டா ஆகிய பகுதிகளில் 7 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவியது. பஞ்சாப் மாநிலத்தில் நெற்பயிர் நாற்று நடும் பருவம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கிராமப்புறப் பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதால் விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதன் காரணமாக முதலமைச்சர் அமரிந்தர் சிங் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது, அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். மிகவும் சிக்கனமாக முறையில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மின்சாரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு ஊதியக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை அலுவலர்கள் மூலம் முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details