தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Punjab Elections 2022: இரு தொகுதிகளில் களமிறங்கும் முதலமைச்சர் சன்னி - பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்

பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி, பஹதூர், சம்கௌர் சாஹிப் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் சன்னி
முதலமைச்சர் சன்னி

By

Published : Jan 31, 2022, 5:42 AM IST

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கான பணிகளை முன்னணிக் கட்சிகள் தீவிரமாக்கியுள்ளன.

வேட்பாளர் தேர்வு, பரப்புரை என பஞ்சாப் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தனது மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி, பஹதூர், சம்கௌர் சாஹிப் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்க்கு எதிராக விஷ்ணு சர்மா என்பவரை பாட்டியாலா தொகுதியில் களமிறக்கியுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டிவருகிறது.

காங்கிரசுக்கு போட்டியாக ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலிதளம், பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆகியவை களத்தில் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் விரைவில் வெளியிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விவசாயியை அவமானப்படுத்திய ஊழியர்கள் - மன்னிப்புக்கேட்ட மஹிந்திரா

ABOUT THE AUTHOR

...view details