தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்... - மனைவி கண்முன்னே கணவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை துணிந்து எதிர்த்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

punjab-dubai-returned-man-shot-dead-in-amritsar-probe-on
punjab-dubai-returned-man-shot-dead-in-amritsar-probe-on

By

Published : Jun 12, 2022, 4:06 PM IST

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கணுபூர் காலே பகுதியில் இன்று (ஜூன் 12) அதிகாலை 3.30 மணியளவில் ஹர்பிந்தர் என்பவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இரண்டு பேர் பணம், நகைகளை கேட்டு மிரட்டினர்.

ஆனால், ஹர்பிந்தர் துணிச்சலாக இருவரையும் எதிர்த்துள்ளார். அப்போது இரண்டு பேரில் ஒருவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், ஹர்பிந்தரை சுட்டு வீழ்த்தினான். இதையடுத்து இருவரும் அங்கிருந்த தப்பியோடினர்.

சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர், ஹர்பிந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல்கட்ட தகவலில், கொல்லப்பட்டவர் சில வாரங்களுக்கு முன்பு துபாயிலிருந்து திரும்பியது தெரியவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரபல பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா, மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details