சண்டிகர்:பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உத்தரவின்படி, பொதுமக்கள் தங்களது சமூக வலைதளங்களில் ஆயுதங்கள் தொடர்பான பதிவுகளை 72 மணிநேரத்திற்குள் தாமாக முன்வந்து அகற்றவேண்டும் என அம்மாநில காவல்துறை டிஜிபி கௌரவ் யாதவ் இன்று (நவ.26) தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப்பில் ஆயதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக நவ.13 முதல் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் உள்துறை செயலர், அம்மாநில காவல்துறை டிஜிபிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களின் பயன்பாட்டிற்கு வழிமுறைகள் வெளியிடப்பட்டன.