பஞ்சாப்: கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்கு சென்றபோது, போராட்டக்காரர்கள் பிரதமரின் காரை மறித்தனர். இதனால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது.
பிரதமர் மோடியின் மொஹாலி பயணம்... பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் பஞ்சாப் அரசு..
பிரதமர் மோடியின் மொஹாலி பயணத்தில் பல அடுக்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், வரும் 24ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமரின் இந்த பயணத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. 3 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.