டெல்லி, ஜலந்தரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் மண்டல அலுவலகத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் இரண்டாக முறையாக இன்றும் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஒரு முறை அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், தற்போது உடல் நலக்குறைவு காரணங்களைச் சுட்டிக்காட்டி ரனீந்தர் சிங், இரண்டாவது முறையாக ஆஜராகாவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜெய்வர் ஷெர்கில், "ரனீந்தர் சிங் அதிக காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் நேரில் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்" எனத் தெரிவித்தார்.