தலைநகர் டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருவதையடுத்து, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.