நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக பகவந்த் மான் நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா பகத் சிங் பிறந்த கிராமத்தில் நடைபெற்றது, இதில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
இதில் 48 வயதான பகவந்த் மான்னுடன் 16 எம்எல்ஏக்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், பதவியேற்ற அடுத்த நாளான இன்று முதலமைச்சர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.