தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்ம விபூஷணைத் துறந்த பாதல்: 'அரசியல் செய்வதை நிறுத்துங்கள்' - முதலமைச்சர் தாக்கு! - பத்ம விபூஷணைத் துறந்த பிரகாஷ் சிங் பாதல்

டெல்லி: தலைநகரில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ள நிலையில், இதனை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.

Punjab CM Amarinder singh Says I dont know why Prakash Singh Badal got Padma Vibhushan
Punjab CM Amarinder singh Says I dont know why Prakash Singh Badal got Padma Vibhushan

By

Published : Dec 5, 2020, 7:57 AM IST

Updated : Dec 5, 2020, 8:09 AM IST

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ளார். மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், "பிரகாஷ் சிங் பாதல் பத்ம விபூஷண் விருதை முதல் ஆளாக ஏன் வாங்கினார் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தச் சமுதாயத்திற்காக பிரகாஷ் சிங் பாதல் என்ன போராடினார், என்ன தியாகம் செய்தார்?

இதைப் பற்றி அரசியல் செய்வதை நிறுத்துங்கள், இந்த நாடகங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்திருக்கலாம், ஆனால் அவை இப்போது வேலை செய்யாது" என விமர்சித்தார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 10ஆவது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Last Updated : Dec 5, 2020, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details