தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உள்கட்சி பிரச்னையால் தத்தளித்த காங்கிரஸ்: பஞ்சாப் முதலமைச்சர் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி - பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்று, காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி  Punjab CM Charanjit Singh Channi Loses Both Seats
பஞ்சாப் முதலமைச்சர் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி Punjab CM Charanjit Singh Channi Loses Both Seats

By

Published : Mar 10, 2022, 3:51 PM IST

சண்டிகர்: பஞ்சாபில் பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

பஞ்சாபில் ஆட்சியமைக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனிபெரும்பான்மையுடன் 94 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்முலம், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை உள்ளது. மேலும், சிரோமணி அகாலி தளம் 3, பாஜக 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை

தேர்தலுக்கு முன்னதாகவே காங்கிரஸ் உள்கட்சி பிரச்சனையால் தத்தளித்த நிலையில், இறுதியாக அக்கட்சியின் முதலமைச்சர் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் பட்டியலின முகமான சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அக்கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.

உள்கட்சி பிரச்சனையால் தத்தளித்த காங்கிரஸ்

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன.

போட்டியிட்ட 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வி சரண்ஜித் சிங் சன்னி

2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 77 இடங்களைக் கைப்பற்றி சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. அதேபோல பாஜக 18 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அகாலி தளத்தைப் பொறுத்தவரையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் தங்களது தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கியவருமான கேப்டன் அம்ரீந்தர்சிங் பாட்டியாலா தனது சொந்தத் தொகுதியில் தோல்வியை தழுவிவிட்டார்.

பஞ்சாப் முதலமைச்சர் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'மாபெரும் புரட்சியை பஞ்சாப் மாநிலம் செய்துள்ளது. மற்றக் கட்சியைச் சேர்ந்த பெரும் தலைவர்களான சுக்பிர் பாதல், பிரகாஷ் பாதல், அம்ரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, பிக்ரம் சிங் மதிஜா எனப் பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். பஞ்சாப் மக்களுக்கு ஆம் ஆத்மி மாற்றத்தை வழங்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

சொந்தத் தொகுதியில் தோல்வி

இதையும் படிங்க:பஞ்சாப் அரசியல் ஜம்பவான்களை துடைத்தெடுத்த ஆம் ஆத்மியின் துடைப்பம்!!!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details