தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Z plus பாதுகாப்பை மறுக்கும் பக்வந்த் மான்... பஞ்சாப் முதலமைச்சரின் திட்டம் என்ன? - பக்வந்த் மான் Z plus பாதுகாப்பு மறுப்பு

பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் Z plus பாதுகாப்பு வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

CM
CM

By

Published : Jun 1, 2023, 4:48 PM IST

சண்டிகர் :மத்திய அரசு தனக்கு வழங்க முன்வந்து உள்ள Z plus பாதுகாப்பு வேண்டாம் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடதம் எழுதி உள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மிரட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு Z plus பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் துப்பாக்கி ஏந்திய 55 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் விரைவில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பொறுப்பை கையில் எடுப்பார்கள் என்றும் கடந்த மே. 25ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனக்கு Z plus பாதுகாப்பு வழங்க வேண்டாம் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில், பஞ்சாப் மற்றும் டெல்லியில் Z plus பாதுகாப்பு தனக்கு வேண்டாம் என்றும், தனது பாதுகாப்பிற்கு பஞ்சாப் காவல் துறையையே விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் பாதுகாப்பு விசயத்தில் பஞ்சாப் காவல் துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. காலிஸ்தான் விவகாரத்தில் பக்வந்த் மான் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த Z-plus பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. பஞ்சாப் போலீசார் வழங்கி வரும் பாதுகாப்பை தவிர்த்து, பஞ்சாப் முதலமைச்சரின் வீடு, அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பகவந்த் மானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மாவோயிஸ்டு மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து அண்ணாமலைக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம்.. காங்கிரசுக்கு கைகொடுக்குமா கர்நாடக பார்முலா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details