சண்டிகர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைக்க பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத்திட்டத்தின்கீழ், அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு வழங்குகிறார்கள். அதன் அடிப்படையில், அவர்கள் ஓய்வுபெறும்போது ஒரு முறை மொத்தத்தொகையைப் பெற உரிமையுடையவர்களாக கருதப்படுவர்.
முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தன. இந்நிலையில் பஞ்சாப் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, பஞ்சாப் அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 டிசம்பரில் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, ஏப்ரல் 1, 2004 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து ஃபரூக் அப்துல்லா ராஜினாமா